இடதுசாரி கருத்தியல் கொண்ட திரைப்படங்களை திரைத்துறையில் தொடர்ச்சியாக பதிவு செய்து வந்த இயக்குனர் ஜனநாதன் மறைவிற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தனது ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் திரைத்துறையை சேர்ந்த தோழர்களின் துயரங்களில் தமுஎகசவும் துணை நிற்கிறது. தோழர் ஜனநாதன் இறுதி அஞ்சலி நிகழ்வில் சென்னையில் உள்ள தமுஎகச தோழர்கள் உரிய பாதுகாப்புடன் திரளாக கலந்துகொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
தோழமையுடன்,
மதுக்கூர் இராமலிங்கம்,
மாநிலத்தலைவர்
ஆதவன் தீட்சண்யா,
பொதுச்செயலாளர்